தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று 5 நாட்களுக்கு கனமழை..!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை பெருநகரில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






