போதைப்பொருள் பயன்படுத்தியதில் 93 ஆயிரம் பேர் உயிரிழப்பு..!
அமெரிக்காவில் கடந்த ஒரு ஆண்டில் போதைப்பொருள் பயன்படுத்தியதில் 93 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் தேசிய உயிரியல் புள்ளிவிவர அமைப்பின் அறிக்கையின்படி வெர்மான்ட் கென்டகி மற்றும் தென் கரோலினா, மேற்கு வெர்ஜீனியா, கலிஃபோர்னியாவில் போதைபொருள் பயன்படுத்தியதால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
ஒப்பியாய்டி எனப்படும் போதைப் பொருளால் இதுவரை அதிகரித்திருந்த உயிரிழப்பு தற்போது சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் பெண்டனில் என்ற போதை பொருளால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. பெண்டனில் பயன்படுத்தியதில் மட்டும் கிட்டத்தட்ட 68,000 பேர் உயிரை மாய்த்துக் கொண்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







