விதிகளை மீறினால் மீண்டும் ஊரடங்கு ..! எச்சரிக்கை..!
கொரொனா இரண்டாம் அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதால் விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய உள்துறை செயலாளர் கடிதங்கள் எழுதியுள்ளார்.
தலைமை செயலாளர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கொரொனா விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படுவதை வட மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும் எனவும் விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொரொனா பரிசோதனைகளை குறைக்க கூடாது என்று உள்துறை செயலாளர் கூறியுள்ளார். தடுப்பூசி செலுத்தும் வேகமும் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தலாம் எனவும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.






