80,000 பார்வையாளர்கள், சர்வதேச இசைக்குழுக்கள்..!
இந்தியாவின் மிகப்பெரிய மாணவர் கலாச்சாரத் திருவிழாக்களில் ஒன்றான சென்னை ஐ.ஐ.டி-யின் ‘சாரங்’, தனது 52-வது நிகழ்வு ‘பியாண்ட் ரியல்ம்ஸ்’ என்ற கருப்பொருளுடன் ஜனவரி 8-ம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் இந்த 5 நாள் விழாவில் சித் ஸ்ரீராம், ஜி.வி. பிரகாஷ் போன்ற பிரபல கலைஞர்களின் நிகழ்ச்சிகள், சர்வதேச இசை கச்சேரிகள் மற்றும் 80,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்புடன் சென்னை மாநகரம் களைக்கட்டவுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி-யின் 52-வது ஆண்டு கலாச்சாரத் திருவிழாவான ‘சாரங்’ வரும் ஜனவரி 8 முதல் 12-ம் தேதி வரை வளாகத்தில் நடைபெறவுள்ளது. ஜனவரி 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் இந்த 5 நாள் விழாவில் சித் ஸ்ரீராம், ஜி.வி. பிரகாஷ் போன்ற பிரபல கலைஞர்களின் நிகழ்ச்சிகள், சர்வதேச இசை கச்சேரிகள் மற்றும் 80,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்புடன் சென்னை மாநகரம் களைக்கட்டவுள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐ.ஐ.டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை ஐ.ஐ.டி-யின் 52-வது ஆண்டு கலாச்சாரத் திருவிழாவான ‘சாரங்’ வரும் ஜனவரி 8 முதல் 12-ம் தேதி வரை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
சுமார் 80,000-க்கும் அதிகமான பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் இந்த விழா, நாட்டின் மிகப்பெரிய மாணவர் அமைப்பால் நடத்தப்படும் கலாச்சார விழாக்களில் ஒன்றாகும். இம்முறை புதிய முன்னெடுப்புகள், மீண்டும் தொடங்கப்பட்ட முக்கிய நிகழ்வுகள் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட சமூக விழிப்புணர்வு திட்டங்களுடன் இந்த விழா சென்னையின் கலாச்சார அடையாளமாகத் திரும்புகிறது.
இந்த ஆண்டின் கருப்பொருள் ‘பியாண்ட் ரியல்ம்ஸ்’ என்பதாகும். கலை என்பது எல்லைகளைக் கடந்து பார்வையாளர்களை ஒரு கற்பனை உலகிற்கு அழைத்துச் செல்லும் என்ற அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்களுக்கு ஐஐடி மெட்ராஸ் வளாகம் போட்டிகள், பட்டறைகள், கண்காட்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளால் ஒரு துடிப்பான கலாச்சாரக் கூடமாக மாறும்.
இந்த ஆண்டு பல புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. திறந்தவெளி மேடை நிகழ்ச்சிகள், 2000-களின் தொடக்கக்கால பாப் கலாச்சாரத்தை நினைவுபடுத்தும் ‘நோவா எக்ஸ்பீரியன்ஸ் சோன்’ (Nova Experience Zone), வளாகத்தைச் சுற்றியுள்ள கலாச்சார ஊர்வலமான ‘சாரங் பரேட்’ ஆகியவை முக்கிய ஈர்ப்புகளாக இருக்கும். மேலும், பல ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரிகளுக்கு இடையிலான ‘சாரங் ஜெனரல் சாம்பியன்ஷிப்’ (GC) மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி, “கலாச்சாரத் திருவிழாக்கள் வளாகத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகின்றன. இது பாரதம் முழுவதிலும் உள்ள மாணவர்கள் ஒருவரையொருவர் சந்தித்து, நம் நாட்டின் பன்முகத்தன்மையை உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைகிறது,” என்றார்.
சாரங் 2026-ன் ஒரு பகுதியாக ‘காலா’ என்ற சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இது பாரம்பரிய கலைக் கலைஞர்களை ஊக்குவிப்பதையும், நலிந்த பிரிவினருக்கு கைவினைப் பொருட்கள் மூலம் வாழ்வாதாரத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு நாளின் இறுதியிலும் நடக்கும் ‘புரோ ஷோக்கள்’ மிகவும் பிரபலம். இந்த 5 நாள் விழாவைத் தொடக்கி வைக்க புகழ்பெற்ற கலை இயக்குனர் பத்மஸ்ரீ தோட்டா தரணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
மேலும், ‘வேர்ல்ட் ஃபெஸ்ட்’ (World Fest) மூலம் இத்தாலி, டென்மார்க் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
திரைத்துறை மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த ஆளுமைகளுடன் கலந்துரையாடும் ‘ஸ்பாட்லைட்’ தொடரில் இந்த ஆண்டு ஜி.வி. பிரகாஷ், சிவாங்கி கிருஷ்ணகுமார், கலா மாஸ்டர், கரேஷ்மா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.” என்று சென்னை ஐ.ஐ.டி தெரிவித்துள்ளது.






