2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வரும் பா.ஜ.க செயல் தலைவர்..!
கடந்த வாரம் பா.ஜ.க மூத்த தலைவர் அமித்ஷா தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரச்சார நிறைவு விழாவில் பங்கேற்றிருந்தார். அதனைத்தொடர்ந்து அன்புமணி தலைமையிலான பா.ம.க அதிமுக கூட்டணியில் இணைந்தது.
2 நாள் பயணமாக நாளை மறுதினம் தமிழகம் வரும் பா.ஜ.க செயல் தலைவர் நிதின் நபின் கோவையில் வரும் ஜனவரி 11-ந் தேதி நடைபெறும் கட்சி தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்றும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில். அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப்பங்கீடு மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ஜ.க தேர்தல் நேரத்தில், கூட்டணியை வலுப்படுத்தவும், மற்ற கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்காகவும் அவ்வப்போது தமிழகத்திற்கு வந்து செல்கின்றனர்.
கடந்த வாரம் பா.ஜ.க மூத்த தலைவர் அமித்ஷா தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரச்சார நிறைவு விழாவில் பங்கேற்றிருந்தார். அதனைத்தொடர்ந்து அன்புமணி தலைமையிலான பா.ம.க அதிமுக கூட்டணியில் இணைந்தது. இதனைத் தொடர்ந்து 2 நாள் பயணமாக நாளை மறுதினம், பா.ஜ.க தேசிய செயல் தலைவர் நிதின் நபின் 2 நாள் பயணமாக தமிழகம் வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இவர் ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூரில் நடைபெறும் கட்சி தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார். நிதின் நபினின் கோவை பயணம், களத்தில் உள்ள அரசியல் சூழலை ஆய்வு செய்யவும், கூட்டணிக் கட்சிகளுடனான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் மட்டுமே அமையும். அதே சமயம் தற்போதைய நிலையில் தொகுதிப் பங்கீடு அல்லது வேட்பாளர்கள் குறித்த ஆலோசனைகள் எதுவும் நடைபெறாது என்றும தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியாக, கூட்டணியில் இருந்த விலகிய ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரை கூட்டணியில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அதிமுக, தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாகவும், இதன் காரணமாக அவர்களை மீண்டும் கூட்டணியில் சேர்க்க பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் தமிழக பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆகியோரின் வருகைக்குப் பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.






