தமிழகத்தின் 8 மாவட்டங்களில் சுட்டெரிக்கும் வெப்பம்!
தமிழகத்தின் 8 இடங்களில் நேற்று வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவானது. பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. மதுரையில் நேற்று 104 டிகிரியும், திருச்சியில் 103 டிகிரியும், நாமக்கல் மற்றும் சேலத்தில் 101 டிகிரியும் தர்மபுரி, கரூர், வேலூரில் தலா 100 டிகிரி வெப்பம் பதிவானது.
இன்று வெயில் அதிகமாக காணப்படும் என்றும் அதே நேரத்தில் தென் தமிழகத்தில் இன்று இலேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒரு மாத ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில் மறுபக்கம் இயற்கை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. நீண்ட காலத்திற்குப் பிறகு கங்கை நீர் குடிப்பதற்கு தகுந்த நீராக மாறி இருப்பதாக சுற்றுச்சூழல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கால் தொழிற்சாலைகள் மூடப்பட்டதன் காரணமாக கங்கை நீரின் தரம் உயர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது. ஹரித்துவாரில் உள்ள கங்கையில் நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் நீராட வருவார்கள். ஊரடங்கால் பக்தர்களின் வருகை இல்லாததால் கங்கைநீர் மேலும் தூய்மையாகி உள்ளது.
கடந்தாண்டு கங்கை ஆற்று தண்ணீர் குளிப்பதற்கு தகுதியற்றது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது நீரில் பிஎச் அளவு சம நிலையில் உள்ளதால் இதனை குடிப்பதற்கு பயன்படுத்தலாம் என்று கூறியிருக்கிறது.







