தனது டுவின் பேபியை பார்க்க 300கி.மீ வெறும் காலில் நடந்து வந்த டிரைவர்
திருமணமாகி பத்து ஆண்டுகளுக்கு பின் பிறந்த இரட்டை குழந்தைகளை பார்ப்பதற்காக கேரளாவிலிருந்து காலனி கூட இல்லாமல் சொந்த ஊருக்கு நடந்து வந்த இளைஞரை மீட்ட குமாரபாளையம் போலீஸார் உணவு கொடுத்து அவரை சரக்கு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த சின்னையன் என்ற அந்த 35 வயது இளைஞன் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். குழந்தைகளை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் சுமார் 300 கிலோ மீட்டர் நடந்து வந்தவரின் காலணிகள் வரும்வழியில் சேதமாகி விட வெறும் காலில் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்துள்ளார்.







