--- --:--:-- --

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து கொலை..!

11.1

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்குள்ள ஒரு கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.

 

இந்த வழக்கில் ராஜா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க ஆட்சியர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டார்.

Leave a Reply

Right Menu Icon