--- --:--:-- --

பள்ளியில் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 7 குழந்தைகள் பலி..!

17

ஷ்யாவில் உள்ள ஒரு பள்ளியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் 7 குழந்தைகள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர்.

 

மத்திய ரஷ்யாவில் டிவோஷனல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும் துப்பாக்கி சூடு நடத்தியவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இந்த சம்பவத்தில் இரண்டு ஆசிரியர்களும் இரண்டு பாதுகாப்பு ஊழியர்களும் பலியாகியுள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய அந்த நபர் கம்பளியால் ஆன தொப்பி அணிந்து இருந்ததாகவும் 2 துப்பாக்கிகளை கொண்டு அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

காயமடைந்தவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் துப்பாக்கிச்சூடு காரணம் தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

 

Right Menu Icon