--- --:--:-- --

இத்தாலியில் ஒரே நாளில் 650 பேர் கொரொனாவால் உயிரிழப்பு! அதிர்ச்சி!

10

சீனாவில் பரவத் தொடங்கிய கொரொனா வைரஸ் பாதிப்பால் அங்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விஷக்கிருமிகள் தொற்று அங்கு கட்டுக்குள் வந்துவிட ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரொனாவின் கொத்தான பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. அங்கு கிட்டத்தட்ட 60,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 5 ஆயிரத்து 500 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது.

 

ஏற்கனவே 5 ஆயிரத்து 500 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 650 க்கும் மேற்பட்டவர்கள் மரணித்து உள்ளது அந்த நாட்டினரையும் உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இத்தாலிக்கு அடுத்தபடியாக மற்றொரு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஏற்கனவே ஆயிரத்து 700 க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் நேற்று மட்டும் 375 பேர் பலியாகியுள்ளனர் .

 

கொரொனா வைரஸ் தொற்று காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக சீனா, ஈரான் ஆகிய நாடுகள் இருந்து வந்தன. இதற்கு அடுத்தபடியாக ஸ்பெயின் இருந்து வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 375 பேர் பலியாகியுள்ளனர்.

 

இந்த எண்ணிக்கையின் மூலம் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ஈரானை பின்னுக்கு தள்ளி ஸ்பெயின் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நாடுகளை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் ஈரானில் 129 பேரும் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் தலா 112 பேரும் கொரொனாவால் கொல்லப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon