--- --:--:-- --

60 வயது மனைவி மேல் ஏற்பட்ட சந்தேகத்தால் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற முதியவர்..!

5

திருப்பத்தூரில் 60 வயதான மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 65 வயதான கணவனை போலீசார் கைது செய்திருக்கின்றனர். தியாகி சிதம்பரநாதன் தெருவை சேர்ந்த சேஷாசலம் மல்லிகா என்ற அந்த தம்பதியின் மகன் மற்றும் மகள்கள் திருமணமாகி வேறு வேறு பகுதிகளில் வசித்து வரஇவர்கள் தனி வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

 

செல்போனில் சிரித்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. எனவே அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். வெள்ளிக்கிழமை இது தொடர்பாக தகவல் ஏற்பட்ட நிலையில் நள்ளிரவில் கட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்த மல்லிகா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாக சொல்லப்படுகிறது. துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சேஷாசலத்தை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon