--- --:--:-- --

கொரொனாவால் உயிரிழந்த வேல் முருகன் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை..!

4.1

கொரோனாவால் உயிரிழந்த ராஜ் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில் ஊடகத்துறையில் சுமார் இருபது ஆண்டுகளாக பணியாற்றி வந்த வேல்முருகனின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும், அவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என்றும் கூறியுள்ளது.

 

வேல்முருகனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு கருணை தொகையாக முதலமைச்சர் 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த செவிலியராக பணியாற்றி வரும் அவரது மனைவிக்கு நிரந்தர அரசு பணி வழங்கிட வேண்டும் என்றும் பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon