ரேஷன் கடைகளுக்கு மார்ச்சில் 6 நாட்கள் விடுமுறை
ரேஷன் கடைகளுக்கு மாதத்தில் முதல் 2 வாரம் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆகும். அதன்படி, மார்ச் மாதத்தில் முதல் 2 வார வெள்ளி, ஞாயிறு கடைகள் திறக்கப்படாது. அதேபோல், மார்ச் மாதத்தில் கூடுதலாக 2 நாள்கள் விடுமுறை வருகிறது.
மார்ச் 30ஆம் தேதி தெலுங்கு வருட பிறப்பு ஆகும். அன்றைய தினத்தில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை ஆகும். மேலும், மார்ச் 31 ரம்ஜான் பண்டிகை. ஆதலால் அன்றைய தினமும் விடுமுறை.





