--- --:--:-- --

50 அடி உயரத்தில் இருந்து விழுந்த இரும்புக்கம்பி..! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்

3

சென்னைக்கு அருகே பால பணியின்போது 50 அடி உயரத்தில் இருந்து இரும்பு கம்பி கீழே விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் நல்வாய்ப்பில் உயிர் தப்பினார். மேடவாக்கத்தில் கடந்த ஓராண்டாக போய் பாலப் பணிகள் நடைபெறுகின்றன .

 

இந்நிலையில் 50 அடி உயரத்திலிருந்து 100 கிலோ வரை எடை கொண்ட இரும்பு கம்பி ஒன்று திடீரென கீழே விழுந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணின் வாகனத்தில் இரும்புக்கம்பி லேசாக உரசியது. இதனால் வாகனத்தில் பயணித்த பெண் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

 

போக்குவரத்து நிறைந்த இடத்தில் நடைபெறும் இந்தப் பணியால் இவ்வழியாக செல்வோருக்கு போதிய பாதுகாப்பில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon