5 பேர் கொலை வழக்கு: 10 பேருக்கு 4 ஆயுள் தண்டனை..!
நெல்லை அருகே 5 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு தலா 4 ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கோயிலில் சாமி ஆடுவது, ஆடு காணாமல் போனது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அத்தாளநல்லூரில் 5 பேர் 2009ம் ஆண்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் 14 பேர் கைதான நிலையில், 3 பேர் இறந்து விட்டனர். இதனால் 10 பேருக்கு 4 ஆயுள், ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.





