--- --:--:-- --

விழுப்புரத்தில் கடல் சீற்றம் காரணமாக 5 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது…!

8

விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக 5 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மரக்காணம் பகுதியில் இரவு முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

 

புயலின் காரணமாக கடல் சீற்றம் அதிகரித்து வருவதால் விழுப்புரம் மாவட்ட பொம்மையார்பாளையம் கிராமத்தில் கடல் பகுதி அமைந்துள்ளது. 5 வீடுகள் இதற்கு முன்னதாகவே சேதமடைந்துள்ளது. இன்று பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

அரசு தக்க நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். அந்த பகுதியில் தொடர்ந்து கடல் சீற்றம் காரணமாக பல்வேறு வீடுகள் மரங்கள் சேதம் அடைந்து வருகிறது. நேற்று இரவே மின்கம்பம் ஆனது இடிந்து விழுந்துள்ளது.

 

அனைத்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தும் மின்துறை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon