--- --:--:-- --

புதையல் இருப்பதாக நம்பி பள்ளம் தோண்டிய 3 பேர் கும்பல்..!

9

திருத்தணி அருகே புதையல் இருப்பதாக நம்பி பள்ளம் தோண்டிய 3 பேர் கும்பலை பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். திருத்தணி முருகன் கோவிலில் உள்ள உற்சவர் சிலை ரெட்டி குளம் பகுதியில் உள்ள பழமையான மண்டபம் ஒன்றில் ஆண்டுக்கு ஒருமுறை வைக்கப்பட்டு விழா நடைபெறும்.

 

இந்த நிலையில் அங்கு புதையல் இருப்பதாக நம்பி 3 பேர் கும்பல் திங்கள்கிழமை நள்ளிரவில் ஆழ குழிதோண்டி உள்ளது. இவர்கள் நடமாட்டத்தை கண்ட பொதுமக்கள் சுற்றி வளைத்துள்ளனர். அப்போது 2 பேர் தப்பி ஓடி விட திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி என்ற பகுதியை சேர்ந்த பாபு என்ற கட்டிட தொழிலாளி சிக்கியுள்ளார். திருத்தணி மகேசன் இரண்டு பேரை பொதுமக்கள் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon