கடலூரில் நிவர் புயல் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.!
கடலூரில் கடல் அரிப்பு ஏற்பட்டு கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடலூரில் கடல் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்படுகிறது. சுமார் 15 அடி வரை கடல் அலைகள் மேல் எழும்ப துவங்கியுள்ளன.
புயலானது கரையை நெருங்க நெருங்க சீற்றம் மிகத் தீவிரம் அடையும் எனவும் கருதப்பட்டுள்ளது. கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலுக்கும், கடலை ஒட்டிய பகுதிகளுக்கும் பொதுமக்கள் யாரும் செல்ல அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவலர்களும், வருவாய்த்துறை காவலர்களும் கடல் பகுதியில் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களைப் பொருத்தவரை நேற்றே பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.






