ரீல்ஸ் மோகத்தால் கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன 4 உயிர்கள்..!
மது போதை மற்றும் ரீல்ஸ் மோகத்தில் 4 உயிர்கள் பறிபோன சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் வைசா நகரில் இருந்து நேற்று மூன்று இளைஞர்கள் மது அருந்திக்கொண்டு காரில் வேகமாக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுத்தனர்.
அப்பொழுது சாலையை கடக்க முயன்ற மூவர் மீது அதிவேகமாக மோதியது. இதில் விபத்தில் சம்பவ இடத்திலேயே மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் காரை ஓட்டிய ஒருவரும் உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






