மாதம் தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம்.. மத்திய அரசு அதிரடி..!
ஒவ்வொரு வீட்டிற்கும் மாதம்தோறும் 300 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர், அஸ்வினி வைஸ்ணவி ஆகியோர் ஒரு கோடி வீடுகளின் மேற்கூறையில் சூரிய ஒளி மின்சார தடைகள் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தெரிவித்தனர்.
75 ஆயிரத்து 21 கோடி திட்டம் குறித்து மத்திய பட்ஜெட்டின் அறிவிப்பு வெளியான நிலையில் மத்திய அமைச்சரவை தற்பொழுது ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் மாதம் தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கப்பெறும் என்று அமைச்சர்
அனுராக் தாகூர் கூறியுள்ளார்





