அணையில் குளித்துக்கொண்டிருந்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி மாயம்..!
கோயம்புத்தூர் மாவட்டம் வாளையார் அணையில் குளித்துக்கொண்டிருந்த 3 பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளனர்.
மலுமிச்சம்பட்டி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வாளையார் அணைக்கு குளிக்க சென்றுள்ளனர்.
3 மாணவர்கள் அரை மணி நேரத்திற்கு மேலாகியும் தண்ணீரை விட்டு வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில் 3 பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளனர்.






