--- --:--:-- --

8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு..!

8

ரியலூர், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கரையைத் கடக்க தொடங்கிய புயல் இன்று அதிகாலை முழுவதுமாக கரையை கடந்தது. புயல் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடலூரில் கடந்த 12 மணி நேரத்தில் 12 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

 

இதனால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. புயல் கரையை கடந்துள்ள போதிலும் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சென்னையிலும் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon