--- --:--:-- --

அசைவ உணவு சாப்பிட்ட 21 பேருக்கு வாந்தி, மயக்கம்..!

5

ட்டுக்கோட்டை அருகே உள்ள உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட 21 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காவல் நிலையம் அருகே உள்ள உணவகத்தில் நேற்று பார்சல் வாங்கி சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் தொடர்ந்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் முகவர்கள் உணவகத்தை முற்றுகையிட்டு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் உணவக ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon