--- --:--:-- --

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!

4

அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள் அதிபர் டிரம்புக்கு சரிவை ஏற்படுத்தியது முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் தங்கம் விலை உச்சம் தொட்ட நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 7) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.245 குறைந்து ஒரு கிராம் ரூ.13,140க்கும் சவரனுக்கு ரூ.1,960 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,120க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

 

இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாளான இன்று (அக்டோபர் 9) தங்கம் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. அதன்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,255க்கும் சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

 

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,850க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.205க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon