--- --:--:-- --

திமுக எம்.பி. கல்யாணசுந்தரம் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு!

6

திமுக மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பரஸ்பர சாகய நிதி லிமிடெட் நிறுவனத்திற்கு இயக்குநர் பதவி காலம் முடிந்ததைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், வேலப்பன், அன்பழகன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.

 

இந்த நிலையில் கடந்த பத்தாம் தேதி தவெகவை சேர்ந்த ஸ்ரீதேவி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்ய முயன்றுள்ளார். அப்போது அவருக்கும் – திமுகவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட நான்கு பேர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon