கார் ரேஸுக்கு 24 கோடி செலவு பண்ணீங்களே, அது யார் அப்பா காசு? – தி.மு.க-வைச் சீண்டிய செங்கோட்டையன்
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கும் திட்டம் தொடர்பாகச் சட்டமன்றத்தில் தி.மு.க மற்றும் த.வெ.க உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது. அப்போது, எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் திட்டத்தைக் கடுமையாக விமரிசித்து கேள்விகளை எழுப்பிய எதிர்க்கட்சியான திமுகவிற்கு, த.வெ.க அமைச்சரும் அவை முன்னவருமான கே.ஏ.செங்கோட்டையன் உடனடியாக எழுந்து மிகக் காட்டாகப் பதிலடி கொடுத்தார்.
அவர் பேசுகையில், “நீங்கள் எத்தனை கோடியில் கார் ஓட்டினாலும், அரசு கார் கொடுக்கிரபோது அதற்கு தனி மரியாதை இருக்கிறது. ஆனால், எங்களைப் பற்றி சொல்கிறீர்கள். தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஆட்சிக் காலத்தில் கார் பந்தயம் நடத்துவதற்காக ரூ.24 கோடி செலவிட்டார்களே, அது யார் அப்பா காசு?” எனக் கேள்வி எழுப்பினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




