--- --:--:-- --

தென் மாநில முதல்வர்கள் மாநாடு..!

7

மித் ஷா தலைமையில், 31-வது தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாடு புதன் மற்றும் வியாழக்கிழமை சென்னை அருகே கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், கர்நாடக முதலமைச்சர் சிவகுமார், கேரள முதல்வர் சதீசன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

 

அத்துடன், அந்தந்த மாநில தலைமைச் செயலர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று இரவு 7:40 மணியளவில் சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக கோவளத்தில் உள்ள தனியார் விடுதிக்குச் செல்லும் அவர் முக்கிய நபர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

இதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை முதலமைச்சர்கள் மாநாட்டில் அமித் ஷா கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, வளர்ச்சித் திட்டங்கள், பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மேலும், காவிரி நீர் பங்கீடு, மேகதாது அணை மற்றும் கர்நாடக துப்பாக்கிச் சூடு விவகாரம் குறித்து விவாதிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

 

இதையடுத்து வியாழக்கிழமை மாலை 3:45 மணிக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா டெல்லி புறப்படுவார் என்று கூறப்படுகிறது. அமித் ஷாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பழைய விமான நிலையத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். இக்கூட்டத்தில் விமான நிலையத்தின் மூத்த அதிகாரிகள், பாதுகாப்புப் பணியாளர்கள், முக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகள், சென்னை காவல்துறையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon