--- --:--:-- --

கோவை கல்லூரி மாணவர் கொலை: சட்டப்பேரவையில் கேள்வி எழுப்புவோம்- இபிஎஸ்

8

கோவை கல்லூரி மாணவர் கொலை தொடர்பாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவையில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்த அவர், இந்தக் கொலை போதைப்பொருள் புழக்கத்துடன் தொடர்புடையதா என்பது குறித்தும் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

 

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கொலை செய்யப்படுவதற்கு போதைப்பொருள் பயன்பாடே முக்கிய காரணமாக இருப்பதாக குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

மேலும், தற்போது 244 கிலோ போதைப்பொருள் பிடிபட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இதுவரை அதிகாரிகளிடம் சிக்காமல் புழக்கத்தில் உள்ள போதைப்பொருளின் அளவு எவ்வளவு என்ற கேள்வியும் எழுகிறது என அவர் தெரிவித்துள்ளார். கோவை கல்லூரி மாணவர் கொலை விவகாரம் மற்றும் தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என்றும் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon