திருவல்லிக்கேணி காவல் துறை விசாரணைக்கு இடைக்காலத் தடை – ஐகோர்ட் உத்தரவு
ஊத்தங்கரை த.வெ.க எம்.எல்.ஏ.விடம் குதிரைபேரம் நடத்தியதாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் ஒவ்வொருவராக சி.பி.ஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து வருவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதன் அடிப்படையில் காவல் துறையின் விசாரணைக்குத் தடை விதிப்பதாகத் தெரிவித்துள்ளனர். இவ்வழக்கில் கைதாகியிருந்த திருநாவுக்கரசு உள்பட 6 பேருக்கு இன்று ஜாமின் வழங்கப்பட்டது. இதுவரை இவ்வழக்கில் 11 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




