--- --:--:-- --

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்: அரசு செய்திக்குறிப்பில் பெயர் நீக்கம்

8

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரில் சென்று அத்தியாவசிய ரேஷன் பொருட்களை வழங்கும் நடைமுறையில், முந்தைய திமுக அரசால் சூட்டப்பட்ட ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ என்ற திட்டத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

 

 

நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்” என்று பொதுவான பெயரிலேயே இத்திட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வரும் ஆகஸ்ட் மாதத்திற்கான விநியோகம் 04.08.2026 மற்றும் 05.08.2026 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டிருப்பது அரசியல் தளத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon