கல்வி அமைச்சர் ராஜினாமா கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்; ராகுல், பிரியங்கா தலைமையில் ஆர்ப்பாட்டம்
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, காங்கிரஸ் மூத்த தலைவர்களும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் வியாழக்கிழமை காலை நாடாளுமன்ற வளாக நுழைவாயிலுக்கு வெளியே நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் போராட்டத்துக்கு தலைமை தாங்கினர்.
நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வி தொடர்பான சர்ச்சைகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சிகள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




