--- --:--:-- --

பெரம்பூர் தொகுதி வெற்றி – விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவு

5

மிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க தலைவர் விஜய் 1,20,365 வாக்குகளைப் பெற்று 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் ஆர்.டி.சேகர் 66,650 வாக்கு பெற்றிருந்தார்.

 

 

இந்நிலையில், பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய் வெற்றியை எதிர்த்து தி.மு.க வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்தனர். தி.மு.க வேட்பாளர் ஆர்.டி.சேகர் தாக்கல் செய்திருந்த தேர்தல் வழக்கில், “வேட்பு மனுவில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கி இருப்பதாகவும்.

 

 

சொத்துக்கள் விவரங்கள் மற்றும் வழக்குகள் விவரங்கள் முறையாக தெரிவிக்கவில்லை என்பதால் விஜய்யின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

 

 

அப்போது, வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள முதலமைச்சர் விஜய், தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என ஆர்.டி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி முதலமைச்சர் விஜய், தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon