--- --:--:-- --

பொள்ளாச்சியில் முதல் மாநாடு… அண்ணாமலை வெளியிடப்போகும் அறிவிப்பு..!

01

மிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை தொடங்கிய ‘WE THE LEADERS’ அமைப்பின் முதல் மாநாடு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று நடைபெற உள்ளது.
பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி ‘WE THE LEADERS’ எனும் அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பில் 19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

 

இந்த அமைப்பின் முதல் மாநாடு போதையில்லாத தமிழகம் என்னும் தலைப்பில் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் இன்று நடைபெறுகிறது.  இதற்காக 15 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தை மையப்படுத்தியும், தென்னை தொழிலை மையப்படுத்தியும் மாநாட்டு முகப்பு அமைக்கப்பட்டுள்ளது.

 

மாநாட்டில் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அமருவதற்கு ஏற்ப இருக்கை வசதிகளும், தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை மற்றும் வாகனங்களை நிறுத்துவதற்கு விரிவான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

 

இன்று மாலை 4 மணி அளவில் மாநாடு தொடங்கும் என்றும், இந்த மாநாட்டில் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து அண்ணாமலை முக்கிய அறிவிப்பு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon