ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் மாற்றம்..!
அன்றாட வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு சேவைகளில் ஜூலை முதல் நாளான இன்று முதல் மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. அதுதொடர்பான முழுமையான விவரங்களை தற்போது பார்க்கலாம்.
அதன்படி, ஆதார் அட்டையில் மின்னஞ்சல் முகவரியை புதுப்பிப்பதற்கான 75 ரூபாய் கட்டணத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ரத்து செய்துள்ளது. அதிகாரப்பூர்வ ஆதார் மொபைல் செயலி மூலம், அடுத்த 6 மாதங்களுக்கு மின்னஞ்சல் முகவரியை புதுப்பித்துக் கொள்ள இனி எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது.
36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்டுக்கான சேவைக் கட்டணம், 1,500 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டதுடன், தட்கல் கட்டணம் 3,500-ல் இருந்து 5,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, ரயில்களில் டிக்கெட் இன்றி பயணிப்பவர்களுக்கான குறைந்தபட்ச அபராதம் 250 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
வங்கிகளில் காப்பீடு அல்லது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு முறைகேடுகளில் பாதிக்கப்படுவோர் முழுத் தொகையையும் திரும்பப் பெறவோ அல்லது இழப்பீடு கோரவோ இனி உரிமை உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




