--- --:--:-- --

எல்பிஜி சிலிண்டர் விலை அதிரடி குறைவு..!

02

ர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது.

 

 

அதன்படி, ஜூலை 1-ம்தேதி வணிகப் பயன்பாட்டிற்கான (19 கிலோ) சிலிண்டர் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல் நிலையாகத் தொடரவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

மேற்காசிய போர் சூழல் காரணமாக கடந்த 4 மாதங்களாக உயர்ந்து வந்த சிலிண்டரின் விலை தற்போது அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.172.50 குறைந்து ரூ.3.106-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமுமின்றி ரூ.957.50-க்கு விற்பனையாகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon