மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி..!
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்டு வந்த வெள்ளப்பெருக்கு தற்போது கணிசமாகக் குறைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அங்குச் சென்று குளிப்பதற்கு வனத்துறை மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடந்த 12 நாட்களாக அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தத் தடை நீக்கப்பட்டு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பது சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




