--- --:--:-- --

CBSE 10-ஆம் வகுப்பு 2-வது தேர்வு முடிவுகள்..!

4

சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்புக்கான இரண்டாவது கட்ட பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களின் தேர்வு மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும், தங்களின் மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள கூடுதல் வாய்ப்புகளை வழங்கும் வகையிலும், இந்த ஆண்டு புதிய தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

 

இதன்படி, 10-ஆம் வகுப்புக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். பிளஸ் 2 வகுப்பிற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆன்லைன் (On-Screen Marking Portal) மூலமாக நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டாவது கட்ட தேர்வுகள் கடந்த மே 15 முதல் மே 21 வரை, நாடு முழுவதும் காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை ஒரே ஷிப்டாக நடத்தப்பட்டன.

 

 

முடிவுகள் வெளியானவுடன், மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் பார்க்கலாம். இதுதவிர, டிஜிலாக்கர் (DigiLocker) மற்றும் உமாங் (UMANG) செயலிகள் மூலமாகவும் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

 

 

மொழிப் பாடங்களைப் பொறுத்தவரை, இந்தி கோர்ஸ்-ஏ பாடத்திற்கு 29,860 பேரும், கோர்ஸ்-பி பாடத்திற்கு 23,476 பேரும் பதிவு செய்துள்ளனர். தமிழ் மொழிக்காக 1,836 மாணவர்கள் இத்தேர்வை எழுதியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு (AI), ரீடெய்ல், ஓவியம் போன்ற பாடங்களுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே பதிவு செய்துள்ளனர்.

 

 

முன்னதாக, ஏப்ரல் 15 அன்று சிபிஎஸ்இ வாரியம் 10-ஆம் வகுப்பிற்கான முதற்கட்ட முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிட்டிருந்தது. அதில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 93.70 சதவீதமாக இருந்தது. மண்டல வாரியாக திருவனந்தபுரம் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது நினைவுகூரத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon