--- --:--:-- --

கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதலமைச்சர் விஜய்..!

3

நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு ஊக்கத்தொகையாக ரூ.50 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வழங்கினார்.நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா வரலாற்றுச் சாதனை படைத்தார்.

 

சாம்பியன் பட்டத்துடன் சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவை, நேரில் அழைத்து முதலமைச்சர் விஜய் பாராட்டினார். அப்போது நார்வே செஸ் 2026 தொடரில் வெற்றி பெற்றதற்காக வழங்கப்பட்ட கோப்பையைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.இன்று தலைமைச் செயலகத்தில் நடந்த அந்த சந்திப்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஊக்கத் தொகையான 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

 

 

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் பெற்றோர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இந்த சந்திப்பின்போது கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தாவுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் செஸ் விளையாடி மகிழந்தார். பிரக்ஞானந்தாவின் அடுத்தடுத்த அசத்தலான காய் நகர்த்தலால் வியந்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பிரக்ஞானந்தா, “போட்டி முடிந்தவுடனே அழைத்து பாராட்டியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த சந்திப்பின்போது முதலமைச்சருடன் செஸ் விளையாடினேன்; அவரே போர்டு எடுத்து வரச்சொல்லி விளையாடினார். இது எனக்கு சர்ப்ரைஸாக இருந்தது. நானே இதை எதிர்பார்க்கவில்லை என்றார்.

 

 

“சுமார் 15 நிமிடங்கள் விளையாடினோம். இறுதியாக நானே அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றேன். ஆனால் அவர் நன்றாகவே விளையாடினார். அவர் விளையாடுவார் என்று நான் கேள்விப்பட்டதில்லை. அவரிடம் கேட்கும்போது நண்பர்களுடன் விளையாடும் வழக்கம் இருப்பதாக குறிப்பிட்டார். ” என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon