--- --:--:-- --

கொருக்குப்பேட்டை செல்லும் வாகனங்கள் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்..!

7

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்க உள்ளதால், வெள்ளிக்கிழமை (ஜூன் 6) முதல் அந்தப் பகுதியில் முக்கிய போக்குவரத்து மாற்றங்களைச் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. டிடி நெக்ஸ்ட் நாளிதழில் வெளியான செய்தியின்படி, புதுவண்ணாரப்பேட்டை ஆர்.கே.நகர் ரயில்வே கேட் பகுதியில், வைத்தியநாதன் மேம்பாலம் முதல் ஆர்.கே.நகர் சந்திப்பு வரை இந்த புதிய மேம்பாலப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமின்றி பயணிக்கப் பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

 

ஆர்.கே.நகர் புதிய மேம்பாலத்தில் இருந்து ஐ.ஓ.சி.எல் (IOCL) செல்லும் கார், இருசக்கர வாகனங்கள் போன்ற இலகுரக வாகனங்கள், ஆர்.கே.நகர் சந்திப்பில் வலதுபுறமாகத் திரும்பி, கொருக்குப்பேட்டை இரயில்வே கேட் வழியாகச் சென்று டி.எச். சாலையை அடைய வேண்டும். அங்கிருந்து வைத்தியநாதன் மேம்பாலத்தில் வலதுபுறமாகத் திரும்பி ஐ.ஓ.சி.எல் சந்திப்பை அடையலாம்.

 

 

மீனாம்பாள் மேம்பாலம் வழியாக ஐ.ஓ.சி.எல் (IOCL) நோக்கி வரும் இலகுரக வாகனங்கள், கே.என்.எஸ் பணிமனை அருகே வலதுபுறமாகத் திரும்ப வேண்டும். அல்லது ஆர்.கே.நகர் சந்திப்பில் இடதுபுறமாகத் திரும்பி, சுண்ணாம்பு கால்வாய் சாலை வழியாகப் பயணித்து, பின்னர் வலதுபுறமாகத் திரும்பி ஐ.ஓ.சி.எல் சந்திப்பைச் சென்றடையலாம்.

 

 

மூலகொத்தளம் வழியாக ஐ.ஓ.சி.எல் (IOCL) செல்லும் பேருந்துகள் மற்றும் லாரி போன்ற கனரக வாகனங்கள், இந்த வாகனங்கள் நேராக மிண்ட் சந்திப்பிற்குச் சென்று, அங்கிருந்து இடதுபுறமாகத் திரும்பி கண்ணன் ரவுண்டானாவை அடைய வேண்டும். தொடர்ந்து டி.எச். சாலை மற்றும் வைத்தியநாதன் மேம்பாலம் வழியாக ஐ.ஓ.சி.எல் சந்திப்பை அடையலாம்.

 

 

மூலகொத்தளம் வழியாக ஐ.ஓ.சி.எல் (IOCL) செல்லும் கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள், ஆர்.கே.நகர் சந்திப்பில் இடதுபுறமாகத் திரும்பி, சுண்ணாம்பு கால்வாய் சாலை மற்றும் அன்னை சத்யா நகர் வழியாகப் பயணித்து, பின்னர் வலதுபுறமாகத் திரும்பி ஐ.ஓ.சி.எல் சந்திப்பை அடையலாம்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon