--- --:--:-- --

எல்பிஜி சிலிண்டர் விலை அதிரடி உயர்வு..!

1

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

 

 

வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன. மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் கடந்த மாதத் தொடக்கத்தில் வணிகப் பயன்பாடு சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

 

அந்த வகையில் இன்று வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 46 ரூபாய் உயர்ந்து 3,283 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே, மார்ச், ஏப்ரல் மாதத்திலும், மே மாதத்தில் மட்டுமே 2 முறை என மொத்தம் 4 முறை உயர்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்திருக்கிறது. அதேபோல, வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையில் மாற்றமின்றி 928.50 ரூபாயக தொடர்கிறது.

 

 

தொடர்ச்சியான இந்த விலை உயர்வால் உணவக உரிமையாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த விலையேற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலாகும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon