--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்..!

3

மிழகத்தில் அடுத்த 22 நாட்களுக்கு 22 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதாவது நீலகிரி, கோவை, சிவங்கங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.

 

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்சி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சென்னயை பொறுத்தவரை நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் கீழ் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon