அரக்கனை விடக் கொடியவர் செந்தில் பாலாஜி – எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் பேசியதாவது, “அரக்கனை விடக் கொடியவர் செந்தில் பாலாஜி; ஐந்து கட்சிகளை மாற்றி சென்றவர். வைரஸை விட மோசமானவர் கரூரை முடித்துவிட்டு தற்போது கோவைக்கு மாறியுள்ளார்.
‘கோடு போட்டால் ரோடு போடுவார்’ என கூறப்படுபவர் கரூரில் சாலை பணிகளில் ஊழல் செய்தவர். 10 ரூபாய் கமிஷன் அடித்தவரை கோவையின் ‘சிம்ம சொப்பனம்’ என முதல்வர் ஸ்டாலின் புகழ்கிறார். கோவை செல்வம் கொழிக்கும் பகுதி என்பதால் அங்கு போட்டியிடுகிறார்; ஏன் கரூரில் நிற்கவில்லை?” என குற்றஞ்சாட்டினார். அவரது இந்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




