நீரிணை பிரச்சினைக்கு ‘பதிலளிக்காத நட்பு நாடுகள்’ பொறுப்பேற்க வேண்டும் – டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பதிவில், ஈரானின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பியதுடன், ஒரு முக்கிய மூலோபாய நீரிணைக்கான (Strait) பொறுப்பை மற்ற நாடுகள் ஏற்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார்.
சமூக வலைதளப் பதிவில், ஈரானிய பயங்கரவாத அரசின் எஞ்சிய பகுதியை நாம் ‘முழுமையாக முடிவுக்குக் கொண்டுவந்தால்’ என்னவாகும் என்று நான் வியக்கிறேன். அந்த ‘நீரிணையை’ (Strait) பயன்படுத்தும் நாடுகள் (நாம் பயன்படுத்துவதில்லை) அதன் பொறுப்பை ஏற்கட்டும்.
அது எதற்கும் பதிலளிக்காமல் இருக்கும் நமது சில ‘கூட்டணி நாடுகளை’ மிக விரைவாகச் செயல்பட வைக்கும் என்று கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




