முக்கிய விருதுகளைத் தட்டிச் சென்ற இரு படங்கள்..!
சினிமா உலகின் உயரிய விருதான ஆஸ்கர். ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 98-வது ஆஸ்கர் விருதுகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. புதிய சாதனையாளர்கள், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் திரையுலக ஜாம்பவான்களின் வருகை என ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் களைகட்டியிருக்கிறது.
இந்த ஆண்டு ‘சின்னர்ஸ்’ (Sinners) மற்றும் ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ (One Battle After Another) ஆகிய திரைப்படங்கள் பல முக்கிய விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளன. ‘சின்னர்ஸ்’ படத்தின் இசைக்காக லுட்விக் கோர்டான்சன் மீண்டும் ஒரு ஆஸ்கர் விருதை வென்று தனது சாதனையைத் தொடர்கிறார். இதேபோல் ஹாலிவுட் நடிகர் சீன் பென் மூன்றாவது முறையாக ஆஸ்கர் விருது வென்றார்.
“One Battle After Another” என்ற திரைப்படத்தில், ராணுவ வீரராக நடித்ததற்காக அவருக்கு சிறந்த துணை நடிகர் விருது வழங்கப்பட்டது. இதற்கிடையே, ஆஸ்கர் விருது வரலாற்றில் ஒரு புதிய சாதனையாக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார் துரால்ட் அர்காபா. ‘சின்னர்ஸ்’ திரைப்படத்தில் படத்தின் ஒளிப்பதிவிற்காக அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
இது தவிர, நார்வே திரைப்படமான சென்டிமென்டல் வேல்யூ (Sentimental Value) சிறந்த சர்வதேசத் திரைப்படத்திற்கான விருதும், கே-பாப் டீமான் ஹண்டர்ஸ் (Kpop Demon Hunters) சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதும் வென்றனர். இதேபோல், வெப்பன்ஸ் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகை விருதை ஆமி மடிகன் வென்றார். ரையான் கூக்லர் சின்னர்ஸ் படத்தின் சிறந்த திரைக்கதைக்காக ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




