திட்டமிட்டு செய்தது அல்ல – ஸ்டாலின்
நேற்று இரவு வரை கூட்டணி கட்சிகளோடு பேசி ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு வந்துள்ளேன். காங்கிரஸ் உடனான கூட்டணிப்பேச்சுவார்த்தை முடிந்தது என நான் சொன்னது வைரல் ஆகிவிட்டது. செய்தியாளர்களிடம் நான் காட்டிய சைகை திட்டமிட்டு செய்தது அல்ல. முடிந்துவிட்டதா என செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு நான் முடிந்துவிட்டது எனக் கூறினேன். எல்லாம் முடிந்தது என நான் கொடுத்த ரியாக்ஷன் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது என்று தஞ்சையில் அமைச்சர் அன்பில் மகேஸ் இல்லத் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




