முதல்வர் புதிய அறிவிப்புகள்..!
உலக சுற்றுலா வரைபடத்தில் தமிழ் பண்பாட்டு சுற்றுலாத்தலமாக தமிழ்நாடு இடம்பெற அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழ் ஃபினாலே நடத்தப்படும், மாமல்லபுரத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டு ஆணையம் அமைத்து, ரூ.100 கோடி முதலீட்டில் நவீன சுற்றுலா உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படும், சிப்காட் நிறுவனம், சுற்றுலாத்தலங்களை கண்டறிந்து முதலீடுகளை ஈர்த்து புதிய சுற்றுலா வசதிகளை உருவாக்க உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்றும் நாளையும் நடைபெறும் தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை அறிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




