பேருந்து மீது லாரி மோதி விபத்து..!
திருவள்ளூர் மாவட்டம் திருமூலைவாயில் அருகே இன்று அதிகாலை நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாகப் பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.வேகமாக வந்து மோதிய லாரி, மின் கம்பத்திலும் மோதி நின்றது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
ஆனால் இக்கட்டான நிலையில் உள்ளே சிக்கிக்கொண்ட உதவியாளரைத் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடிப் பத்திரமாக மீட்டனர். பனிப்பொழிவு காலங்களில் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




