--- --:--:-- --

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி.. 100 நாள் வேலைத்திட்ட பணி பொறுப்பாளர் சுகன்யா நீக்கம்!

thinakathanvayal news

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, குஞ்சங்குளம் ஊராட்சியில், மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து, நமது “குற்றம் குற்றமே” இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

பணிக்கு வரும் தொழிலாளர்களை அவமதிப்பது, மரியாதை குறைவாக பேசுவது போன்ற அடாவடிகளை செய்து வந்த சுகன்யா, திட்டத்தில் பணியாளர்களை தேர்வு செய்வது, ஊதியம் தருவதிலும் பல்வேறு தில்லுமுல்லுகளை செய்து வந்ததாக பயனாளிகள் நம்மிடம் கண்ணீரோடு கூறிய குற்றச்சாட்டுகள் அடிப்படையில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

 

“குற்றம் குற்றமே” இதழில் வெளியான செய்தி காட்டுத்தீ போல ராமநாதபுரம் சுழன்றடித்திருக்கிறது; அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. செய்தி வெளியானதுமே அதிகாரிகள் தரப்பிலும், அரசியல் பிரமுகர்கள் தரப்பிலும் நம் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, மக்கள் பிரச்சினைகள் மீது நாம் அக்கறை கொண்டு வெளியிட்ட செய்திக்காக பாராட்டினர். பொதுமக்களும் நமது செய்தியை சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து நமக்கு ஆனந்த கண்ணீருடன் நன்றியை தெரிவித்தனர்.

 

அதிகாரிகள் தரப்பில் நம்மிடம் பேசிய சிலர், விசாரணை நடத்தி உண்மையென தெரியவந்தால், அடாவடி சுன்யா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். சொன்னதுபோலவே, பணிப்பொறுப்பாளர் சுகன்யா தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது இடத்திற்கு வேறு பொறுப்பாளரை வட்டாள வளர்ச்சி அலுவலர் அலுவலகம் நியமனம் செய்துள்ளது.

(BDO) வட்டார வளா்ச்சி அலுவலா் உடந்தையா..?

 

பயனாளிகள் சிலரிடம் வெற்றுப்பேப்பரில் மிரட்டி கையெழுத்து
பயனாளிகள் சிலரிடம் வெற்றுப்பேப்பரில் மிரட்டி கையெழுத்து

ஆனால், இவ்வளவு பட்டும் புகாருக்குள்ளான சுகன்யா இன்னும் திருந்தியபாடில்லை என்று தெரியவந்துள்ளது. உடனடியாக பதற்றத்துடன் நமது அலுவலகத்தை தொடர்பு கொண்டு, யார் செய்தி கொடுத்தது என்றெல்லாம் விவரம் கேட்க முயன்றார். அத்துடன் நிற்காமல்வேலைபறிபோன ஆத்திரத்தில்  கீழக்கோட்டை, சீந்திவயல், கிராமத்திற்கு சென்ற சுகன்யா, 100 நாள் திட்ட பணிகள் குறித்து யார் பத்திரிகைக்கு தகவல் கொடுத்தது என்று மிரட்டும் தொனியில் கேட்டுள்ளார். பயனாளிகள் சிலரிடம் வெற்றுப்பேப்பரில் மிரட்டி கையெழுத்து கேட்டிருக்கிறார். பலரும் மறுத்துவிட்ட நிலையில், ஒருசிலரிடம் அவர் கையெழுத்து பெற்றிருப்பதாகச் சொல்கிறார்கள்.

 

பட்டும் திருந்தாத சுகன்யா போன்றவர்களின் பின்னணியில், வட்டார வளர்ச்சித்துறை அலுவலகத்தில் உள்ள சிலர் இருப்பார்களோ என்ற சந்தேகத்தை ஊர் மக்கள் கிளப்புகின்றனர். சுகன்யா போன்றவர்களின் செயலால் மத்திய , மாநில அரசுகள் மீதுதான் மக்களுக்கு அதிருப்தி ஏற்படும். இதை எப்படி, உள்ளூர் திமுக- பாஜக பிரமுகர்கள் கண்டும் காணாமல் இருக்கிறார்கள் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர், பணி முறைகேடு புகாரில் நீக்கம் செய்யப்பட்டுள்ள சுகன்யாவின் பின்னணியை முழுமையாக விசாரிக்க வேண்டும். அரசு திட்டங்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் சுகன்யாவுக்கு பின்னால் ஆதரவாக செயல்படும் கும்பலை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon