பிடிபட்ட ரோலக்ஸ் காட்டு யானை..!
கோவையில் பிடிபட்ட ரோலக்ஸ் காட்டு யானை, ஆனைமலை வனப்பகுதியில் விடுவிப்பு. கோவை தொண்டாமுத்தூரில் விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் என்ற காட்டு யானையை கடந்த 17ம் தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
பிடிபட்ட ரோலக்ஸ் யானை டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மந்திரிமட்டம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் விடப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




