சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு – தேவசம் போர்டு முன்னாள் தலைவர் கைது!
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு விவகாரத்தில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் வாசு கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவாரபாலகா் சிலைகளின் கவசங்களுக்குத் தங்க முலாம் பூசும் செலவை பெங்களூரைச் சோ்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவா் ஏற்றுக்கொண்டாா்.
பின்னா், அந்தப் பணிகளுக்காகக் கவசங்களை அவா் சென்னைக்கு கொண்டு வந்தாா். இந்நிலையில், அந்தக் கவசங்களில் சுமாா் 4 கிலோ தங்கம் குறைந்தது கண்டறியப்பட்டு சா்ச்சை ஏற்பட்டது.
இந்த வழக்கு எஸ்ஐடி விசாரணைக்கு மாற்றபட்ட நிலையில், உன்னிகிருஷ்ணன் ஏற்கெனவே கைது செய்யப்பட்டாா்.
அதைத்தொடா்ந்து சபரிமலை முன்னாள் நிா்வாக அதிகாரி பி.முராரி பாபு, சபரிமலை முன்னாள் செயல் அதிகாரி சுதீஷ் குமாா் ஆகியோா் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.இந்நிலையில், தேவஸ்வம் போர்டு முன்னாள் தலைவா் என்.வாசுவிடம் விசாரணை மேற்கொண்ட எஸ்ஐடி அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
கேரள மாநில அரசின் உயா் பதவிகளில் இருப்போருடன் நல்லுறவைப் பேணி வருபவரான என்.வாசு கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




